அமெரிக்காவில் பயங்கரம்! துப்பாக்கியால் சுட்டு தமிழர் படுகொலை!!

அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாநிலத்தில் உள்ள கேரி நகரில் அமெரிக்கத் தமிழர் செல்வராஜு வெள்ளியங்கிரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 55 வயதான செல்வராஜ், வீட்டிற்கு அருகே உள்ள நீச்சல் குளத்தின் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளாதாகத் தெரிகிறது. துப்பாக்கியால் சுட்டவர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை. போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக
 

அமெரிக்காவில் பயங்கரம்! துப்பாக்கியால் சுட்டு தமிழர் படுகொலை!!அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாநிலத்தில் உள்ள கேரி நகரில் அமெரிக்கத் தமிழர் செல்வராஜு வெள்ளியங்கிரி  துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

55 வயதான செல்வராஜ், வீட்டிற்கு அருகே உள்ள நீச்சல் குளத்தின் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.  தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளாதாகத் தெரிகிறது. 

துப்பாக்கியால் சுட்டவர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை. போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக நகர காவல்துறை அதிகாரி கேத்தரின் கிறிஸ்டியன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்ச் சங்கப் பணிகளில் பங்கேற்று கரோலைனா தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். செல்வராஜுவின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கரோலைனா தமிழ்ச் சங்கம், அவரின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

செல்வராஜு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் கேரி பகுதியில் தமிழர்கள் உள்ளிட்ட  இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியால் இந்தப் பகுதியில் ஆபத்து இல்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் மாநகரில் அதிகாலை நடைப்பயிற்சி சென்று இந்தியப் பெண் கொலை செய்யப்பட்டார். வேலை, தொழில் வாய்ப்புகள் அதிகமாக உள்ள அமெரிக்காவில் இத்தகைய அசம்பாவித சம்பவங்களுக்கும் அதிகமான வாய்ப்புகள் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

வேலைக்காக அமெரிக்கா போன இடத்தில் பாதுகாப்பாக இருப்பது தான் முதன்மையானதாகும். உரிய முன்னெச்சரிக்கைகள் எடுத்து கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

A1TamilNews.com

 

From around the web