ட்ரம்பின் கொரோனா நிவாரணத் திட்டம்! 5.5 மில்லியன் டாலர்கள் ஆட்டையைப் போட்ட அமெரிக்க இந்தியர் கைது!!

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு முடக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ட்ரில்லியன்டாலர்களை பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்தனர். பொதுமக்களுக்கு நேரடி உதவித் தொகை, ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் கொடுப்பதற்காக சிறு, குறு நிறுவனங்களுக்கு நிவாரண உதவித் தொகை, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி 5.5 மில்லியன் டாலர்களை மோசடி செய்துள்ளதாக அமெரிக்க இந்தியர் முகுந்த் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

ட்ரம்பின் கொரோனா நிவாரணத் திட்டம்! 5.5 மில்லியன் டாலர்கள் ஆட்டையைப் போட்ட அமெரிக்க இந்தியர் கைது!!அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு முடக்கத்தால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ட்ரில்லியன்டாலர்களை பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்தனர்.

பொதுமக்களுக்கு நேரடி உதவித் தொகை, ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் கொடுப்பதற்காக சிறு, குறு நிறுவனங்களுக்கு நிவாரண உதவித் தொகை,  கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன.

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி 5.5 மில்லியன் டாலர்களை மோசடி செய்துள்ளதாக அமெரிக்க இந்தியர் முகுந்த் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிறுவனங்கள் பெயரில் போலி டாக்குமெண்ட்களை சமர்ப்பித்து 5.5 மில்லியன் டாலர்கள் நிதியைப் பெற்றுள்ளார். பின்னர் அந்தப் பணத்த்தை ராபின்ஹூட் மார்ட்கேஜ் என்ற நிறுவனத்திற்கு சொந்தப் பயன்பாட்டிற்காக மாற்றியுள்ளார் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்காக என்று கூறி பணம் பெறப்பட்டுள்ள நிலையில், அவருடைய நிறுவனத்தில் ஒருவர் கூட வேலை பார்க்க வில்லை என்று அரசு தரப்பில் கூறுகிறார்கள். 24 பேருக்கு வேலை வாய்ப்பை தொடர்ந்து உறுதி செய்வதற்காக சம்பளத்திற்கான கடனுதவி என்று விண்ணப்பித்து பணத்தைப் பெற்றுள்ளாராம்.

மைசூரு பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினீரியரிங் படித்த முகுந்த் மோகன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் டைரக்டராக பணியாற்றியுள்ளார். பெங்களூருவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வட்டத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படுபவர். வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கியவர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்டுள்ளார்.

A1TamilNews.com

 

From around the web