‘போனா போகட்டும்னு போஸ்டர் ஒட்ட இடம் கொடுத்தா ஹவுஸ் ஓனரையே மிரட்டுவியா?’ – அஜித் ரசிகர்கள் 10 பேரை ‘அள்ளிய’ தேனி போலீஸ்

நடிகர் அஜித் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் படம் விஸ்வாசம். பொங்கல் பண்டிகைக்கு வெளிவர இருக்கும் இத்திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் சார்பில் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் தேனி பாரஸ்ட் ரோடு 5 வது தெருவில் விஸ்வாசம் படத்திற்கு அவரது ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டரில் மர்ம நபர்கள் சாணி அடித்துள்ளனர். இதன் காரணமாக போஸ்டர் ஒட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் சாணி அடித்தது யார் என்று ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடுப்பான வீட்டின்
 

‘போனா போகட்டும்னு போஸ்டர் ஒட்ட இடம் கொடுத்தா ஹவுஸ் ஓனரையே மிரட்டுவியா?’ – அஜித் ரசிகர்கள் 10 பேரை ‘அள்ளிய’ தேனி போலீஸ்
டிகர் அஜித் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் படம் விஸ்வாசம். பொங்கல் பண்டிகைக்கு வெளிவர இருக்கும் இத்திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் சார்பில் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் தேனி பாரஸ்ட் ரோடு 5 வது தெருவில் விஸ்வாசம் படத்திற்கு அவரது ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டரில் மர்ம நபர்கள் சாணி அடித்துள்ளனர். இதன் காரணமாக போஸ்டர் ஒட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் சாணி அடித்தது யார் என்று ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கடுப்பான வீட்டின் உரிமையாளர் ஜெயமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித் ரசிகர்களான பாலமுருகன், அஜித்குமார், சதீஸ்வரன், விஜய், செல்வகுமார் உள்ளிட்ட 10 ரசிகர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமாக பேசியது என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தேனி போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். போனால் போகட்டும் என்று போஸ்டர் ஒட்ட இடம் கொடுத்தால், வீட்டின் சொந்தக்காரரையே கொலை செய்வதாக மிரட்டுவீர்களா என அந்த ரசிகர்களை போலீசார் கண்டித்தனர்.

விஸ்வாசம் திரைப்படம் தேனியை மையமாக கொண்ட கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

From around the web