காவல்துறை அதிகாரிகளை எட்டி உதைத்த அதிமுக பிரமுகர்!!

சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு உயிர்கள் பலியாவதற்கு காவல்துறையின் சிலர் காரணமாக இருந்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரியை எட்டி உதைத்த அதிமுக பிரமுகரின் வீடியோ சமூகத் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 1980ம் ஆண்டு திமுக சார்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.அர்ஜுனன் தற்போது அதிமுகவில் உள்ளார். சேலம் சுங்கச்சாவடியில் இவருடைய கார் சென்ற போது போலீசார் விசாரித்துள்ளனர். பணியில் இருந்த காவல்துறை அதிகாரிக்கு இவர் யாரென்று தெரியவில்லை போலும். ஒருமையில் கெட்ட வார்த்தைகளுடன் போலீசாரை திட்டுகிறார்
 

காவல்துறை அதிகாரிகளை எட்டி உதைத்த அதிமுக பிரமுகர்!!சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு உயிர்கள் பலியாவதற்கு காவல்துறையின் சிலர் காரணமாக இருந்துள்ள நிலையில், காவல்துறை அதிகாரியை எட்டி உதைத்த அதிமுக பிரமுகரின் வீடியோ சமூகத் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

1980ம் ஆண்டு திமுக சார்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.அர்ஜுனன் தற்போது அதிமுகவில் உள்ளார்.  சேலம் சுங்கச்சாவடியில் இவருடைய கார் சென்ற போது போலீசார் விசாரித்துள்ளனர். பணியில் இருந்த காவல்துறை அதிகாரிக்கு இவர் யாரென்று தெரியவில்லை போலும்.

ஒருமையில் கெட்ட வார்த்தைகளுடன் போலீசாரை திட்டுகிறார் அர்ஜுனன். அவரை அங்கிருங்கு விலக்கி காருக்குள் ஏறச் செய்கிறார் உதவியாளர். ஆனால் காரிலிருந்து திரும்பவும் இறங்கிய அர்ஜுனன் போலீஸ் அதிகாரியை காலால் எட்டி உதைக்கிறார்.

இந்த வீடியோ சமூகத் தளங்களில் பரவி வருகிறது.

கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்த குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு உயிரிழந்துள்ள இரு வியாபாரிகள், கோவையில் பள்ளி மாணவனை அடித்த போலிசார், தென்காசியில் போலீஸ் அடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர், எட்டயபுரத்தில் போலீசார் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி என போலீசார் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளை எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

சம்மந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மீது இது வரையிலும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web