அதிர்ச்சி!நடிகர் விஜய் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபர்!

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளுக்கும் முடங்கிக் கிடக்கும் வேளையில் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி கால் ஒன்று வந்ததில் நடிகர் விஜய்யின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பின்பு மிரட்டல் வெறும் புரளி என
 

அதிர்ச்சி!நடிகர் விஜய் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபர்!சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளுக்கும் முடங்கிக் கிடக்கும் வேளையில் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி கால் ஒன்று வந்ததில் நடிகர் விஜய்யின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பின்பு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. காவல் துறை மேற்கொண்ட தீவிர விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக புவனேஷை காவல்துறை  கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது நடிகர் விஜய் வசித்து வரும், நீலாங்கரை இல்லத்திலும்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web