ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி!

டெல்லியில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் தப்பிவிட்டாலும் தொண்டர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த தேர்தலில் டெல்லி மெஹ்ரலி தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற நரேஷ் யாதவ், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் க்ட்சியினருடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். வரும் வழியில் அவரை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
 

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி!டெல்லியில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் தப்பிவிட்டாலும் தொண்டர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கடந்த தேர்தலில் டெல்லி மெஹ்ரலி தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற நரேஷ் யாதவ், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் க்ட்சியினருடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். வரும் வழியில் அவரை குறி வைத்து  துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதில் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் அசோக் மன் என்பவர் பலியாகியுள்ளார். மற்றுமொரு தொண்டர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான சஞ்சய் சிங் இதை உறுதி செய்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

https://www.A1TamilNews.com

 

 

From around the web