4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 17 நாட்களுக்குள் தண்டனை!!

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 17 நாட்களுக்குள் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறாருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தயராம் மேக்வால் என்ற 21 வயது இளைஞர் 4 வயது சிறுமியை கடந்த நவம்பர் 30ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை மறுநாள் போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கடந்த ஏழாம் தேதி
 

4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 17 நாட்களுக்குள் தண்டனை!!ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 17 நாட்களுக்குள் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறாருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தயராம் மேக்வால் என்ற 21 வயது இளைஞர் 4 வயது சிறுமியை கடந்த நவம்பர் 30ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை மறுநாள் போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து கடந்த ஏழாம் தேதி அவருக்கு எதிராக போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தினந்தோறும் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை நடத்த 17 நாள்களுக்குள் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

https://www.A1TamilNews.com

From around the web