வெங்காய லாரி கடத்தல்.. 3.5 லட்ச ரூபாய் வெங்காயம் மாயம்!

மூன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தியுள்ளனர். பீகார் மாநிலத்தில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியை மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். அதில் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் இருந்துள்ளது. 5 டன் வெங்காயத்துடன் வந்த இந்த லாரியை துப்பாக்கி ஏந்திய 6 மர்ம நபர்கள் வழி மறித்து கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. கைமூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் இந்த துணிகரம் நடந்துள்ளது. காரில் வந்த மர்ம நபர்கள் லாரியை இடைமறித்து,
 

வெங்காய லாரி கடத்தல்.. 3.5 லட்ச ரூபாய் வெங்காயம் மாயம்!மூன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தியுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியை மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். அதில் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் இருந்துள்ளது. 5 டன் வெங்காயத்துடன் வந்த இந்த லாரியை துப்பாக்கி ஏந்திய 6 மர்ம நபர்கள் வழி மறித்து கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கைமூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் இந்த துணிகரம் நடந்துள்ளது. காரில் வந்த மர்ம நபர்கள் லாரியை இடைமறித்து, ட்ரைவரை துப்பாக்கி முனையில் மிரட்டி , லாரியை கைப்பற்றியுள்ளனர்.

ட்ரைவரை காரிலேயே 4 மணி நேரம் சுற்றி விட்டு கடைசியில் ஒரு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். லாரி குறிப்பிட்ட இடத்தில் நிற்கும் என்றும் கூறியுள்ளனர். வெங்காயத்தை அபேஸ் செய்து விட்டு லாரியை விட்டுச் சென்றுள்ளனர். ட்ரைவர் அளித்துள்ள புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரிகளை சோதனை செய்து வருகின்றனர். கடத்தப்பட்ட வெங்காயம் வேறு லாரிகள் மூலம் செல்ல வாய்ப்புள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடத்துகிறார்கள்.

 https://www.A1TamilNews.com

From around the web