நெல்லையில் 21 டன் ரேஷன் அரிசி கடத்தல்! ஏழு பேர் கைது!!

நெல்லை மாவட்டத்திலிருந்து 21 டன்கள் ரேஷன் அரிசியை கடத்தி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரிசி ஆலையில் கடத்தி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எஸ்விகே மாடர்ன் ரைஸ் மில்லில், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சிஐடி போலீசார் நடத்திய அதிரடி சோதனை மூலம் 21 டன்கள் அரிசியை கைப்பற்றியதுடன் சம்மந்தப்பட்ட 7 நபர்களை கைதும் செய்துள்ளனர். சாத்தான்குளம் தாலுகா, அரசூர் கிராமத்திற்குட்பட்ட தேரிவிளை பகுதியில் அமைந்துள்ளது எஸ்விகே மாடர்ன் ரைஸ் மில். சிஐடி போலிசாருக்கு
 

நெல்லையில் 21 டன் ரேஷன் அரிசி கடத்தல்! ஏழு பேர் கைது!!நெல்லை மாவட்டத்திலிருந்து 21 டன்கள் ரேஷன் அரிசியை கடத்தி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரிசி ஆலையில் கடத்தி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எஸ்விகே மாடர்ன் ரைஸ் மில்லில், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சிஐடி போலீசார் நடத்திய அதிரடி சோதனை மூலம் 21 டன்கள் அரிசியை கைப்பற்றியதுடன் சம்மந்தப்பட்ட 7 நபர்களை கைதும் செய்துள்ளனர்.

சாத்தான்குளம் தாலுகா, அரசூர் கிராமத்திற்குட்பட்ட தேரிவிளை பகுதியில் அமைந்துள்ளது எஸ்விகே மாடர்ன் ரைஸ் மில். சிஐடி போலிசாருக்கு கிடைத்துள்ள துப்பு அடிப்படையில் அதிரடியாகச் சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கே 420 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் அரிசி மூட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் குடோனிலிருந்து கடத்தப்பட்ட அரிசி மூட்டைகள் என்று தெரிய வந்தது. உவரி, திசையன்விளை வழியாக வந்துள்ள அரிசி மூட்டைகளை தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் உள்ள அரிசி ஆலையில் பதுக்கி வைத்துள்ளனர். சம்மந்தப்பட்ட நபர்களான சாமிநாதன், நல்லரசு, நடேசன், மகாராஜன், கண்ணன், பாபு, லிங்கேஷ்  ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் பயன்படுத்தப்பட்ட லாரியையும் கைப்பற்றியுள்ளனர்.

A1TamilNews.com

 

From around the web