17 வயது சிறுமி தீக்குளிப்பு! உல்லாசத்திற்கு அழைத்த 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார், குகன், வேல்சாமி ஆகிய மூன்று பேர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இந்த மூன்று பேரும், செல்போன் மூலம் அழைத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மனமுடைந்த சிறுமி வீட்டில்
 

17 வயது சிறுமி தீக்குளிப்பு! உல்லாசத்திற்கு அழைத்த 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார், குகன், வேல்சாமி ஆகிய மூன்று பேர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.

அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இந்த மூன்று பேரும், செல்போன் மூலம் அழைத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்தி  பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி  தீ வைத்துக் கொண்டார். பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிறுமி அளித்த வாக்குமூலம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியது. சம்மந்தப்பட்ட சரவணகுமார், குகன், வேல்சாமி ஆகிய மூவரையும் பிடிக்க போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிறுமியின் தீக்குளிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web