தமிழகத்தில் ஒரே நாளில் 12,000 பேர் கைது!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பித்திருந்த போதிலும் தமிழகத்தில் வாகன ஓட்டிகள் சாலைகளில் அடிக்கடி வலம் வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த தோப்புக்கரணம், அபராதம், வாகனங்கள் பறிமுதல் போன்ற அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை செயல்படுத்தி வருகிறது. நேற்று மட்டும் தடை உத்தரவை மீறியதாக ஒரே நாளில் 12 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதி முதல் இதுவரை சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுபவர்கள் மீது ஒரு லட்சத்து
 

தமிழகத்தில் ஒரே நாளில் 12,000 பேர் கைது!!கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பித்திருந்த போதிலும் தமிழகத்தில் வாகன ஓட்டிகள் சாலைகளில் அடிக்கடி வலம் வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த தோப்புக்கரணம், அபராதம், வாகனங்கள் பறிமுதல் போன்ற அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை செயல்படுத்தி வருகிறது.

நேற்று மட்டும் தடை உத்தரவை மீறியதாக ஒரே நாளில் 12 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதி முதல் இதுவரை சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுபவர்கள் மீது ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 38 லட்சத்து 54 ஆயிரத்து 144 ரூபாய் அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

A1TamilNews.com

From around the web