இந்தியாவில் 2 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நாட்டின் முக்கிய சில நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைத் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 8171பேருக்குப் புதிதாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 பேர்.
 

இந்தியாவில் 2 லட்சத்தைத் தாண்டியது கொரோனா தொற்றின் எண்ணிக்கை!  வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நாட்டின் முக்கிய சில நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதைத் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 8171பேருக்குப் புதிதாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 பேர். இதனால் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 2லட்சம் பேர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 6000பேர்.

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 96000பேர். மகாராஷ்டிரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 70000பேர். உயிரிழந்தவர்கள் 2360பேர்.

இந்தியப் பொருளாதார நகரமான மும்பை கொரோனாவால் சிக்கி சின்னாபின்னமடைந்து வருகிறது. மும்பையில் மட்டும் 41000பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300பேர்.

தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1000ஐ கடந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.

A1TamilNews.com

From around the web