அய்யய்யோ…! சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சென்னையில் உள்ள கொரோனாத் தொற்றை குறித்து மேற்கொண்டிருந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் படி சென்னையில் ஜூன் முதல் வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16000ஐத் தாண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் ஜூன் 2ம் தேதி சென்னையில் 16,585 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் படி ஜூலை முதல் வாரத்தில் பாதிப்பு
 

அய்யய்யோ…! சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சென்னையில் உள்ள கொரோனாத் தொற்றை குறித்து மேற்கொண்டிருந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் படி சென்னையில் ஜூன் முதல் வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16000ஐத் தாண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல்  ஜூன் 2ம் தேதி சென்னையில் 16,585 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் படி ஜூலை முதல் வாரத்தில்  பாதிப்பு எண்ணிக்கை 75000ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 780க்கும் மேல் அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஜூலை மாத இறுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டும் வாய்ப்புக்கள் அதிகம். செப்டம்பரில் மேலும் உச்சத்தை அடையும்  எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் பட்சத்தில் ஓரளவு குறையலாம் எனவும்,  தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது இடங்களில் நடமாடத் தொடங்கினால்  விளைவுகள் இன்னும் மோசமாகலாம் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

A1TamilNews.com

From around the web