கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்?

கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்றுவால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக பம்பரமாக சுழன்று பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தொற்று அவருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம்
 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்?கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்றுவால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக பம்பரமாக சுழன்று பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தொற்று அவருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கிறது.

தலைநகர் சென்னையில் முக்கியமான முன்னணி திமுக தலைவர்களில் ஒருவராக ஜெ.அன்பழகன் உள்ளார். அவருடைய தந்தை பழக்கடை ஜெயராமனும் தீவிரமான திமுக தொண்டராக இருந்தவர். தி.நகரில் திமுக அடையாளத்துடன் ஜெயராமன் பழக்கடை இன்றும் செயல்பட்டு வருகிறது.

A1TamilNews.com

From around the web