நாங்குனேரியில் மீண்டும் காங்கிரஸ் போட்டி?

நாங்குனேரி: விரைவில் நடைபெற உள்ள நாங்குனேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. நாங்குனேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. நாங்குனேரி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தேவைப்பட்டால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறவும் காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுத் தர
 

நாங்குனேரியில் மீண்டும் காங்கிரஸ் போட்டி?

நாங்குனேரி:  விரைவில் நடைபெற உள்ள நாங்குனேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

நாங்குனேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. நாங்குனேரி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தேவைப்பட்டால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறவும் காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுத் தர வேண்டும் என்று திருநாவுக்கரசரிடம் மேடையிலேயே கோரிக்கை விடுத்தார். உதயநிதி ஸ்டாலின் அங்கே போட்டியிடுவார் என்று கூட கூறப்பட்டது.

அதன் பின்னர் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம் அடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியாகி உள்ளது. தற்போது உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு இருக்கிறது.

நான்குனேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்த் குழும உரிமையாளரும் காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் பிரிவு தலைவருமான எச்.வசந்தகுமார் தொடர்ந்து 2 தடவை வெற்றி பெற்றார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாங்குனேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

நாங்குனேரியில் வசந்த்குமாரின் அண்ணனும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– வணக்கம் இந்தியா

From around the web