கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர்தேர்வுகளை ரத்து செய்ய முடியாது! பல்கலைக் கழக மானியக் குழு அறிவிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா பாதிப்பால் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்களுக்கும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழக இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டே இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்படுகிறது என தெரிவித்திருந்தது. பல்கலைக்கழக இறுதியாண்டு
 

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர்தேர்வுகளை ரத்து செய்ய முடியாது! பல்கலைக் கழக மானியக் குழு அறிவிப்பு!ந்தியாவில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா பாதிப்பால் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்களுக்கும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழக இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டே இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்படுகிறது என தெரிவித்திருந்தது.

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் என்பதை எதிர்த்து 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதற்கு பதில் இந்த பிராமணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web