மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

மருத்துவ நிபுணர்கள் குழு ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரைத்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் பொது போக்குவரத்து மூலம் கொரோனா பரவுவதாக கூறியுள்ளனர். ஆனால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். ஆனாலும் முதலமைச்சர் ஜூலை 31ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்துள்ளார். சென்னை
 
மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!மருத்துவ நிபுணர்கள் குழு ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரைத்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  
 
இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் பொது போக்குவரத்து மூலம் கொரோனா பரவுவதாக கூறியுள்ளனர். ஆனால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
 
ஆனாலும் முதலமைச்சர் ஜூலை 31ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்துள்ளார். சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை தொடரும். மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்
 
ஜூலை 5 ஆம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மாவட்டங்களுக்குள் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்து ஜூலை 1 – ஜூலை 15 வரை தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது
 
ஜூலை 6ம் தேதி முதல் கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி அளிக்கப்படுகிறது. அதே வேளையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தரிசனம் அனுமதிக்கப்படாது. 
 
 
மதம் சார்ந்த வழிபாடுகள், சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிக்கப்படுகிறது. திருமணம், இறுதிசடங்குகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி பெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்
 
பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தடை தொடரும் என்றும், ஆன்லைன் கல்விக்கு தடையில்லை என்றும், மாவட்டம், மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

From around the web