‘தேன்நிலவில் மனைவியை காணோம்’ படத்தில் யோகி பாபு?

 
Kuganathan-Yogibabu

வி.சி.குகநாதன் தயாரிக்கும் ‘தேன்நிலவில் மனைவியை காணோம்’ என்ற நகைச்சுவை படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

வி.சி.குகநாதன் தயாரித்து வந்த ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து குகநாதன் மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘தேன்நிலவில் மனைவியை காணோம்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் உருவான 250 படங்களில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக, டைரக்டராக பணி புரிந்த வி.சி.குகநாதன், இந்தப் படத்தின் கதையை இன்றைய இளைஞர் சமுதாயத்தின் ரசனைக்கேற்ப எழுதியிருக்கிறார்.

யோகி பாபு நேரில் சென்று குகநாதனிடம் கதையை கேட்டு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மலையாள பட உலகின் முன்னணி நட்சத்திரம் ஒருவர், இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமய்யா, இமான் அண்ணாச்சி, மொட்டை ராஜேந்திரன், சிவசங்கர், பிரியங்கா, ரிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

புகழ்மணி வசனம் எழுதியிருக்கிறார். தேவா இசையமைக்கிறார். ஆரூரான் தயாரிக்க, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா திரைப்படக் கல்லூரியில் பயிற்சிபெற்ற கயல் கதிர்காமர், இந்தப் படத்தில் டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.

From around the web