விஜய் விஷ்வா நடித்துள்ள ‘சாயம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

 
Saayam

விஜய் விஷ்வா நடித்துள்ள ‘சாயம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன். இவர் தனது பெயரை விஜய் விஷ்வா என்று மாற்றி கொண்டுள்ளார்.

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.

விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படிக்கும் மாணவர்கள் மீது சாதிச் சாயம் பூசுவதால் நாயகன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி ‘சாயம்’ படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘சாயம்’ படத்தின் இசை முற்றும் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

From around the web