விஜய் சார் கிட்ட 150 தடவைக்கு மேல் வாய்ப்பு கேட்டேன்... எனக்கு வாய்ப்பே தரவே இல்லை.. வருத்தத்தில் நடிகர் ஜெய்..!

 
Vijay-Jai

நடிகர் சிம்புவின் திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு திருமணம் என நடிகர் ஜெய் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழ் திரைப்படப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில், உறுப்பினர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய், மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது அந்நிகழ்வில் பேசிய நடிகர் ஜெய், பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன்பிறகு அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில், இதுவரை 150 தடவைக்கு மேலாக நான் வாய்ப்புக்கேட்டுவிட்டேன்.. ஆனால், “அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல.” அப்புறம் எதுக்கு என கேட்டுவிட்டதாக வருத்தத்துடன்  கூறினார்.

பின்னர் உங்களுக்கு வயதாகி விட்டதே எப்போது திருமணம் என்று கேட்டதுக்கு, நடிகர் சிம்புவின் திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு திருமணம் என கூறிவிட்டார். அநேகமான அடுத்த ஆண்டு சிம்புவின் திருமணம் நடந்துவிடும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஜெய் தெரிவித்த இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jai

இதனைத்தொடர்ந்து பேசிய மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் மதுரையில் பிறந்தேன். என்னுடைய அப்பா, கணவர், மாமியார் அனைவருமே கல்வித்துறையில் இருந்தவர்கள் என தன்னுடைய வாழ்க்கைப்பற்றி பேசினார். பின்னர் சினிமா மீதான ஆசையில் நடிகர் விஜய்யின் ஆரம்ப கட்ட சில படங்களைத்தயாரித்து பல்வேறு துறைகளில் பயணித்து வருகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் அதற்கு அவசியம் என கூறினார்.

மேலும் எப்போதும் பெண்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பேன் என்றும், அவரது திறமைகள் முடங்கி விடக்கூடாது எனவும் சாதித்து பொதுவெளிச்சத்திற்கு வர வேண்டும் என கூறினார். மேலும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து படம் இயக்கத் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Jai

பின்னர் இந்நிகழ்வில் பேசிய சுப்பு பஞ்சு, நான் வில்லனாக நடிப்பது முதல் முறையல்ல, நான் நடிக்க ஆரம்ப காலக்கட்டத்தில் என்னுடைய வில்லன் கதாபாத்திரத்தை மக்கள் திட்டிய நாள் இல்லை. இருந்தாலும் பல கதாபாத்திரங்களிலும் நடிப்பேன் என்பதை பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் காட்டிவிட்டேன் என்றும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கத் தாயர் என்று குறிபிட்டுள்ளார்.  

மேலும் ஓடிடியால் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? என்ற கேள்விக்கு "ஓடிடி போல் எத்தனை புதிய விஷயங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கிற அனுபவம் எதிலும் கிடைக்காது. சினிமா இருக்கும் வரை தியேட்டர்களும் இருக்கும் என்றார்.

From around the web