நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்கும் விஜய் பட நாயகி..?

 
நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்கும் விஜய் பட நாயகி..?

நடிகை பூஜா ஹெக்டே சம்பள விஷயத்தில் நயன்தாராவோடு போட்டிக்கு வந்துள்ளார்.

 மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்துக்கு அவர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது தென்னிந்திய மொழிகளில் பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதுவரை அவர் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் வசூல் ஈட்டி உள்ளன. சமீபத்தில் அல்லு அர்ஜுடன் நடித்த தெலுங்கு படமும் வெற்றி பெற்றது. எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்று பேசுகிறார்கள். ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்தபோது ரூ.2 கோடி வாங்கினார். தற்போது இந்தியில் 2 படங்கள், தமிழில் 2 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் என்று 6 படங்களில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நடித்த எல்லா படங்களும் வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

From around the web