‘தளபதி 66’ படத்தில் இரட்டை வேடங்களில் விஜய்..? வெளியான புது அப்டேட்..!

 
Thalapathy-66

விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் குறித்து புது அப்டேட் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இதன் படப்பிடிப்பு பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும்  படம் ‘தளபதி 66’. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  

தற்போது இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் பூஜை வரும் ஜனவரி மாதமும், படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்  இந்த படத்தை குறித்த ஒரு சில தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது. அப்படிதான் தற்போது இப்படத்தை பற்றிய  முக்கிய தகவல் ஒன்று  வெளிவந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் விஜய் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று பிளாஷ்பேக்கில் வரும் கெட்டப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து இந்த படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தமன், தற்போது பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியை தொடங்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web