விஜய்யின் 66-வது படத்தை இயக்குகிறார் வம்சி பைடிபல்லி!

 
Vamsi-Vijay

நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளதாக வெளியான தகவல் உறுதியாகி உள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ‘தளபதி 65’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கொரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்த படத்தை பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். கொரோனா படப்பிடிப்பை முடக்கி உள்ளதால் ரிலீசை தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைக்க ஆலோசிக்கிறார்கள்.

இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் யூகமான தகவல் பரவி வந்தது.

வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம், பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

விஜய் படத்தை இயக்குவதை வம்சி தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போத “நான் விஜய் படத்தை இயக்க இருப்பது உண்மைதான். இதனை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். படத்தை தில்ராஜூ தயாரிக்கிறார். நான் இதுவரை எடுத்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் விஜய் படம் தயாராகிறது” என்றார்.

From around the web