நடக்கக்கூட முடியாமல்.. மருத்துவமனையில் எலும்பும் தோலுமாக.. பவர் ஸ்டாருக்கு என்னாச்சு..?

 
PowerStar-Srinivasan

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லத்திகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதனைத் தொடர்ந்து காமெடி நடிகராக வலம் வரத் தொடங்கி தற்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'கேப்மாரி' உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் பவர் ஸ்டார் சீனிவாசன் ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் நாயகனாக பவர் ஸ்டார் சீனிவாசனே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் வைரல் ஸ்டார் என்ற பட்டத்துடன் வருகிறார் வனிதா விஜயகுமார். இந்தப் படத்தின் போட்டோ ஷூட்டில் வனிதா விஜயகுமாரும் பவர் ஸ்டாரும் மணக்கோலத்தில் இருந்தனர். அந்த போட்டோக்கள் வெளியாகி இணையத்தை திணறடித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தளத்தில் திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்ததாக படக்குழு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன், மருத்துவமனையில் நடக்க முடியாமல் உடம்பு இளைத்து எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு என்ன ஆனது என கேட்டு வருகின்றனர். இதனிடையே பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முதுகு தண்டுவடத்தில் கிராக் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

From around the web