பொங்கலுக்கு சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகிறது

 
Etharkum-Thuninthavan

சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரெய்லர், பொங்கலன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் இப்படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தற்போது இப்படத்தை வரும் பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.

டி.இமான் இசையில் பாடல்கள் மற்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 4-ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் பொங்கல் திருநாளன்று வெளியாகும் என கூறப்படுகிறது. 

From around the web