சூர்யாவின் ‘வாடிவாசல்’ டைட்டில் லுக் வெளியீடு!

 
Vaadivaasal

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இதனை வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தந்தை, மகன் என இருவேடங்களில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறனும் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி படம் இயக்கி வருகிறார். அந்தப் படத்தை முடித்து விட்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வாடிவாசல் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகிறது. டைட்டில் லுக்கில் சீறும் காளையின் உருவில் நாணயம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த காளையின் முத்திரையை சுற்றிலும் மனிதன், காளையின் கால் தடங்கள் இடம்பெற்றுள்ளன. இது காளைக்கும், மனிதனுக்கும் இடையிலான அந்த பிணைப்பை காட்டுகிறது. டைட்டில் லுக் முழுக்க கருப்பு நிறத்தில் உள்ளது.

From around the web