கேங்ஸ்டராக நடிக்கிறார் சூர்யா..!

 
Suriya-in-gangster

நடிகர் சூர்யா மீண்டும் கேங்ஸ்டர் கதபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்திருந்த ‘சூரரைப் போற்று’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சூர்யா கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே நடிகர் சூர்யா நந்தா, ஆறு, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கும் ‘வாடி வாசல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா தற்போது அக்சய் குமார் நடிப்பில் 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.

From around the web