‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெறும் சிம்பு..!

 
Simbu

நடிகர் சிம்புவுக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கௌரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டது.

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசனுக்கு, வருகிற ஜனவரி 11-ம் தேதி ‘கௌரவ டாக்டர்’ பட்டம் கொடுத்து சிறப்பு செய்ய உள்ளதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web