போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ஷிவானி..!

 
Shivani

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படம் மூலம் பெரிய திரையில் அறிமுகமாக இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவர் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘விஜேஎஸ் 46’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

'சேதுபதி' படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Shivani

இந்த நிலையில் 'விஜேஎஸ் 46' திரைப்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸ் உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை நடிகை ஷிவானி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை வெளியிட்டு 'கூலான இயக்குனருடன் வேலை செய்வதில் பெருமையாக இருக்கிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

From around the web