ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஐங்கரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
Ayngaran

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘ஐங்கரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருந்த படம் ‘ஐங்கரன்’. இந்தப் படம் சில பொருளாதார சிக்கல்களினால் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர்கள் படத்திற்கு இருந்த தடைகளை எல்லாம் நீக்கி படத்தின் ரிலீசுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, ‘ஐங்கரன்’ படம் வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

ஜனவரி தொடக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘வலிமை’ போன்ற திரைப்படங்கள் வெளியாவதால் ‘ஐங்கரன்’ படத்தை குடியரசு தினமான ஜனவரி 26-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜனவரி 26-ல் நடிகர் விஷால் நடித்துள்ள ‘வீரமே வாகை சூடும்’ படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஐங்கரன்’ படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.  இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பிசியாக இருக்கிறார். தற்போது அவர் 'யானை', 'சர்தார்', 'வாடிவாசல்', 'மாறன்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கிறார்.

From around the web