முன்னாள் கணவர் சதீஷ் மீது பிரபல கானா பாடகி புகார்!!

 
Isaivani

தனக்கு கொலை மிரட்டலும் விடுக்கும்  முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

விவாகரத்து பெற்ற பிறகும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, தனக்கு கொலை மிரட்டலும் விடுக்கும் முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நீதிமன்றம் மூலம் முறையாக விவகாரத்து பெற்று பிரிந்த தன்னை  மனைவி என குறிப்பிட்டு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சதீஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது அனுமதி இல்லாமல் சதீஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள தன் புகைப்படங்களை அகற்றுமாறும் புகாரில் திரைப்பட பாடகி இசைவாணி தெரிவித்துள்ளார்.

From around the web