பிரபல நகைச்சுவை நடிகர் பால சரவணன் தந்தை கொரோனாவுக்கு பலி!!

 
Bala-Saravanan

நடிகர் பால சரவணனின் தந்தை கொரோனா பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 60.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானவர் பால சரவணன். அதை தொடர்ந்து வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து உள்ளார்.

கொரோனா 2-வது அலையில் பால சரவணனின் உடன்பிறந்த தங்கையின் 32 வயதேயான கணவர் கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழந்தார். இந்த மரணம் அவர்களுடைய குடும்பத்தை நிலைகுலையவைத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் அனைவரும் மீண்டு வந்த நிலையில், பால சரவணனின் தந்தை எஸ.ஏ. ரெங்கநாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிகக்ப்பட்டும், ரெங்கநாதனை காப்பாற்ற முடியவில்லை.

குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு மரணங்களால் பால சரவணன்னும் அவரை சேர்ந்தோரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அவருடைய இழப்பிற்கு கோலிவுட் பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.


 

From around the web