‘முருங்கக்காய்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

 
Murungakkai

பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் ‘முருங்கக்காய்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மருத்துவராக இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா படத்தை தயாரித்து இயக்கி நடிகராக அறிமுகமானார். சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி ரோலில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகராக பவர் ஸ்டார் சீனிவாசனை அறிமுகப்படுத்திய நடிகர் சந்தானம், தொடர்ந்து தனது பல படங்களில் நடிக்க வைத்து, ரசிகர்கள் மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு என்று ஒரு தனி இடத்தையும் பெற்றுத் தந்தார்.

இயக்குநர் ஆர்.எஸ். மணி இயக்கத்தில், ஹீரோவாக மீண்டும் கலக்க உள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன். அந்த படத்திற்கு ‘முருங்கக்காய்’ என்ற விவகாரமான டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் ஸ்ரீ ஹேமா, கல்லூரி வினோத், நம்பிராஜன், மாரிமுத்து, தமிழ்செல்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எஸ்.எல்.எஸ் பிலிமிஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்திற்கு பிரேம்குமார் சிவபெருமான் இசை அமைக்க பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் ‘முருங்கக்காய்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

From around the web