நட்சத்திரப் பட்டாளங்களுடன் புதிய  ‘ஷோலே’ வாக வரும் பேட்ட!

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் 80 களில் வெளி வந்த ‘தனிகாட்டு ராஜா’ படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, விஜயகுமார், ராஜேஷ், ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், ஒய்.விஜயா, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.ஆர்.ஆர் வாசு, வி. கோபால கிருஷ்ணன், சி.எல். ஆனந்தன், சங்கிலி முருகன், கண்ணன், ஐசரி வேலன், வி.நட்ராஜ், சத்யகலா, சில்க் ஸ்மிதா, ஒய்.ஜி.மகேந்திரன், இடிச்சபுளி செல்வராஜ், என அந்தக்காலத்தின் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். டைட்டிலில் கூட
 
 
நட்சத்திரப் பட்டாளங்களுடன் புதிய  ‘ஷோலே’ வாக வரும் பேட்ட!
சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் 80 களில் வெளி வந்த  ‘தனிகாட்டு ராஜா’ படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, விஜயகுமார், ராஜேஷ், ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், ஒய்.விஜயா, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.ஆர்.ஆர் வாசு, வி. கோபால கிருஷ்ணன், சி.எல். ஆனந்தன், சங்கிலி முருகன், கண்ணன், ஐசரி வேலன், வி.நட்ராஜ்,  சத்யகலா, சில்க் ஸ்மிதா, ஒய்.ஜி.மகேந்திரன், இடிச்சபுளி செல்வராஜ்,  என அந்தக்காலத்தின் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். 
 
டைட்டிலில் கூட “உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்” என்று ஒரே வரியில் போட்டிருப்பார்கள். தனிகாட்டு ராஜா படத்திற்குப் பிறகு நட்சத்திரப் பட்டாளங்கள் ரஜினியுடன் நடிக்கும் படம்  “பேட்ட” தான் என்று சொல்லலாம்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், விஜய் சேதுபதி, எம்.சசிகுமார், இயக்குனர் மகேந்திரன், நவாசுதின் ஷா, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், மாளவிகா, முனிஸ்காந்த், குரு, சனந்த் ரெட்டி, மணிகண்டன், ஷபீர்,  விவேக் பிரசன்னா என இன்றைய நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
 
திரையுலக சீனியாரிட்டி படி படத்தொடக்கத்தின் டைட்டிலில் அனைவருடைய பெயர்களும் இடம்பெறுமா அல்லாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் பேட்ட என்று போடப்படுமா என்று கேள்வியும் எழுகிறது. 
 
பேட்ட பட விழாவில் இது ஷோலே படம் போல் பிரம்மாண்டமான  படமாக மாறிவிட்டது கார்த்திக் என்று ரஜினிகாந்த். சமீப கால தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இத்தனை நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடித்தது கிடையாது. ரஜினிகாந்த் சொன்னது போல் பேட்ட படம்,  தமிழ் சினிமாவின் ஷோலே என்று கூறலாம்.
 
– வணக்கம் இந்தியா

From around the web