இயக்குநர் அட்லியின் புதிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா..?

 
Nayanthara-ShahRukhKhan

இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் அறிமுகம் அட்லி, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து மூன்று விஜய் படங்களை இயக்கி கோலிவுட்டில் முன்னணி இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்தார். இந்நிலையில்தான் பாலிவுட் வாய்ப்பு அட்லிக்கு வந்தது.

‘மெர்சல்’ படத்தைப் பார்த்து அட்லிக்கு ஓகே சொன்ன ஷாருக்கானுக்கு, கிட்டத்தட்ட இதேபோன்று டபுள் ஆக்‌ஷன் படத்தை இயக்குகிறார் அட்லி. இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த நிலையில் ஷாருக்கான் - அட்லி படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் எனத் தெரிகிறது.

ஆனால், இன்னும் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகியுள்ளதாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

From around the web