இந்திய சினிமாவில் அறிமுகமாகும் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்..!

 
Liger

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘லைகர்’ திரைப்படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘லைகர்’. இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். தற்காப்புக் கலை, சண்டைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

இந்நிலையில், மைக் டைசன் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், “முதல் முறையாக, குத்துச்சண்டை மேடையின் ராஜா இந்திய சினிமாவின் பெரிய திரைகளில் தோன்றவுள்ளார். மைக் டைசனை லைகர் குழுவுக்கு வரவேற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web