சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 
Etharkkum-Thunindhavan

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 40-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், காரைக்குடியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டிருப்பவர்களுக்கு மட்டுமே படப்பிடிப்பில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சூர்யா 40’ என்று அழைத்து வருகிறது படக்குழு.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ள நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

அதன்படி, இன்று (ஜூலை 22) மாலை 6 மணியளவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 'எதற்கும் துணிந்தவன்' என்று பெயரிட்டுள்ளது படக்குழு. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் பணிபுரிந்து வருகிறார். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

From around the web