கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

 
Viruman-first-look-poster

கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழ்நாட்டைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி சங்கர் இந்தப் படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ‘விருமன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுனவம் தன்னுடைய சமூக வலைதளத்தில் விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


 

From around the web