தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!!

 
Vathi

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
 
தமிழ், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிஸியாக நடித்து வரும் நடிகர் தனுஷ், முதன் முதலாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.

இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் இந்த படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சம்யுக்தா மேனன், சாய் குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

From around the web