பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி..!

 
Mahesh-Babu

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும், லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான், மருத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றி தற்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன்.

என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி செலுத்தாத அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் தடுப்பூசி கடுமையான அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web