பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

 
TP-Gajendran

பிரபல இயக்குநர் டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினருக்கும் உள்ளிட்டோருக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web