பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி!! தடுப்பூசி போட்டும் தாக்கியதாக தகவல்

 
John-Abraham

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ருஞ்சால் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக, கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.

இதில் மராட்டியத்தில் கொரோனா மீண்டும் பெரும் விளைவுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ-கள் என கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ருஞ்சால் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அவர், இருவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுவிட்டதாகவும், ஆனால் கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் தென்படுவதாகவும் அதனால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web