மகிழ்ச்சி!எஸ்.பி.பி உடல் நிலை சீரடைந்து வருகிறது!-மருத்துவமனை நிர்வாகம்!
தமிழகத்தில் கொரோனா பாரபட்சமின்றி பரவி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் திரைப்பட பிண்ணனிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் அவர் குணமடைய ரசிகர்களும் ,திரைத்துறையினரும், நண்பர்களும் கூட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேட்கப்படும் கேள்விகளுக்கு சைகை மூலம் பதிலளிப்பதாகவும், நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் குணமடைவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.