பிரபல நிறுவனத்துடன் ஹாட்ரிக் அடிக்கும் அனுஷகா..! புதிய படத்தின் செம அப்டேட்!!

 
Anushka

அனுஷ்காவின் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்க உள்ள 48-வது படம் பற்றிய தகவலை யூவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா இரண்டு வருடங்களுக்கு மேலாக படங்களில் நடிக்கவில்லை. அவர் கடைசியாக நடித்து இருந்த ‘நிசப்தம்’ படம் கொரோனாவால் தாமதமாகி கடந்த வருடம் வெளியானது.

அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் மாப்பிள்ளை பார்த்து விட்டனர் என்றும் கிசுகிசுக்கள் வந்தன. அவை உறுதிப்படுத்தப்படவில்லை. உடல் எடை கூடியதால் மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் அனுஷ்காவின் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்க உள்ள 48-வது படம் பற்றிய தகவலை யூவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை பி.மகேஷ்பாபு எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராக உள்ளதாகவும் இதில் அனுஷ்கா மாடர்ன் பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web