அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் ஒத்திவைப்பு..! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
Valimai

வலிமை திரைப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ‘வலிமை’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனால் ‘வலிமை’ படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.கொரோனா பரவல் காலத்தில் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

From around the web