வதந்திகளுக்கு  எதிராக என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி - நடிகை சமந்தா

 
Samantha

விவாகரத்தை தொடர்ந்து தன்னை சுற்றும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ளார்.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தார். இவர்களது விவாகரத்து குறித்து பல்வேறு வதந்திகள், யூகங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தாவை நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினர். அவரோ அதிக படங்களில் நடிப்பதால் ஏற்கவில்லை. இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்கின்றனர். சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. சமந்தா தன்னை விட அதிக படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையாக வளர்ந்தது, நாகசைதன்யாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியதாகவும், இதுவும் விவாகரத்துக்கு காரணம் என்றும் வதந்திகள் பரவின.


இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது சமந்தா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

ஆழ்ந்த பச்சாதாபம், அக்கறை மற்றும் பொய்யான கதைகள் மற்றும் பரப்பப்படும் வதந்திகளுக்கு  எதிராக என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி. எனக்கு மற்றொருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற மறுப்பு தெரிவித்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி, மற்றும் கருவை கலைத்தேன் என வதந்திகள் வந்தன.

விவாகரத்து மிகுந்த வலியை அளித்துள்ளது அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் அளிக்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து தான் தன்னை பாதுகாத்துக் கொள்வேன் என்றும் நான் உடைந்து விட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

From around the web