அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த்..?

 
Siddharth

அருண்குமார் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சித்தார்த் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண்குமார். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’ என்னும் படத்தினை இயக்கினார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘சிந்துபாத்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதற்குப் பிறகு பல்வேறு நடிகர்களிடம் கதைகள் கூறிவந்தார். ஆனால், எதுவுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.

இந்நிலையில் அருண்குமார் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே சித்தார்த் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். சித்தார்த்துடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. யார் தயாரிப்பாளர், எப்போது படப்பிடிப்பு தொடக்கம் உள்ளிட்டவை குறித்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

From around the web