விவசாயிகளின் இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி - நடிகர் கார்த்தி

 
Karthi

வேளாண் சட்டம் ரத்து குறித்த பிரதமரின் அறிவிப்பு உயிரை ஈந்து போராடிய விவசாயிகளின் இடைவிடாது போராட்டத்தின் வரலாற்று வெற்றி என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த 11 மாதங்களுக்கு  மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

“மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையே ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்” என பதிவிட்டுள்ளார்.

From around the web