இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் பைக் ரைடு போட்டோஸ்!!

 
Ajith

நடிகர் அஜித் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த நிலையில, நண்பர்களுடன் இணைந்து அஜித் கடந்த ஜனவரி மாதம் சிக்கிமுக்கு பைக் ரைடு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் விலை உயர்ந்த பைக்கில் ஸ்டைலிஷாக இருக்கும் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web