சின்னவயசு குருவான இசையமைப்பாளர் அர்ஜுனன் மறைவு – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!
மலையாளத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த எம்.கே.அர்ஜுனன் 84 வது வயதில் காலமானார். திங்கட்கிழமை கொச்சி, பல்லுருத்தியில் அவருடைய வீட்டிலேயே உயிர் பிரிந்தது.
700 பாடல்களுக்கும் மேல் இசையமைத்துள்ள அர்ஜுனன், ஏ.ஆர் ரஹ்மானுக்கு சிறுவயதில் பயிற்சியும் ஊக்கமும் அளித்துள்ளார். அர்ஜுனனின் மறைவையொட்டி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள ரஹ்மான் சிறுவயதில் இருவரும் எடுத்துக் கொண்ட படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இரங்கல் செய்தியில், “ அன்பின் சிறு செயலும் வாழ்நாள் முழுக்க நீடித்து இருக்கும். என்னுடைய சிறுவயதில், என்னிடம் காட்டிய அன்பையும், ஊக்கத்தையும் என்றும் மறக்க மாட்டேன்.
எண்ணிலடங்காத உங்களுடைய மெல்லிசைப் பாடல்கள் உங்கள் சகாப்தத்தின் சாட்சியாக விளங்குகிறது. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் எம்.கே.அர்ஜுனன் மாஸ்டர். குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்,” என்று ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
An act of kindness lasts a lifetime. I will never forget the love & encouragement you gave me during my childhood.Your innumerable melodic songs are a testament for your everlasting legacy. May you rest in peace MK Arjunan Master…My condolences to the family, friends & admirers pic.twitter.com/GpVO4FebII
— A.R.Rahman (@arrahman) April 6, 2020